ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0 3615

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான் வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், தகுதியானவர்களுக்குக் கடன் கொடுப்பதன் மூலம் வங்கிகளும் வளரும், மக்களும் வளர்வார்கள் என்றார்.

ஏழை, எளிய மக்கள், விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கு வங்கிகள் உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், தமிழக அரசால் வகுக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்குப் பயன் தர வங்கிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments